Saturday, May 22, 2010

'அன்புடன்' எழுதியவர்கள்


அனுராதா ரமணன் மறைந்துவிட்டார்.

மலர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் 10 நாட்களுக்கும் மேலாக இருந்திருக்கிறார். எத்தனையோ சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள் எழுதிப் புகழ் பெற்றவர்.
 

நான் இவரது எழுத்துக்களை படித்தது வார இதழ்களில். தனி நபர்களின் பிரச்சனைகளுக்கு நடைமுறை சாத்தியங்களில் பதில் அளிப்பார். சில வினோத பிரச்சனைகளை பார்த்து நான் மலைத்தது உண்டு. அதற்கு இவரது பாணியில் தெளிவான பதில் இருக்கும். வாரமலரில் வந்துகொண்டிருக்கும்  'அன்புடன் அந்தரங்கம்' பெண்களிடம் அவ்வளவு பிரசித்தம்.

இவரது பல நாவல்கள் திரைப்படமாக வந்திருக்கிறது. 20-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். தன்னால் முடிந்த உதவிகளை அடுத்தவருக்குச் செய்து வந்த அவர், இறந்த பிறகும் தன் கண்களைத் தானமாக வழங்கி, இருவருக்கு ஒளியூட்டியிருக்கிறார்.

இவரது ரசிகர் ஒருவர் இப்படி பகிர்ந்திருக்கிறார். பார்க்க அற்புதமனுஷி அனுராத ரமணன் க்ளிக்கவும்.
 
************
 
28.4.2010 அன்று எழுதப்பட்ட இந்தக் கடிதம் தமிழ்நாட்டின் எல்லாப் பத்திரிகைகளாலும் நிராகரிக்கப்பட்டு மலையாள வாரப் பத்திரிகையான கலா கௌமுதியில் கவர் ஸ்டோரியாக வெளிவந்துள்ளது.
 
 
 

ஏ.ஆர். ரஹ்மானுக்கு சாரு நிவேதிதா எழுதியது. உங்கள் கருத்தென்ன?  படித்துவிட்டு சொல்லவும்.

4 comments:

Thangavel K said...

ஏ.ஆர். ரஹ்மானுக்கு சாரு நிவேதிதா எழுதிய varigal aamothikkum padiyakathan ullana.. even though he has got oscar award, the songs in VTV & Ravan are not good as mentioned..

Ilangkumaran said...

நாவல்கள், கதைகள், புத்தகங்கள், கட்டுரைகள் படிக்கும் பழக்கம் எனக்கில்லை.
அதனால், அனுராதா ரமணன் பற்றியக் கட்டுரை எனக்கு பயனுள்ள செய்தியாகவே இருந்தது.
ரஹ்மானைப் பற்றிய சாரு நிவேதாவின் விமர்சனம் அருமை.
எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நீங்கள் பிரசுரித்ததால் செய்தி அறிந்தேன்.

Surendhar said...

நான் படித்தபோது அடைந்த சிறு அதிர்ச்சியை உங்களிடம் சொல்ல பிரியப்பட்டேன். அதனாலே பதிந்தேன்.

shaba said...

anna , intha charu yaru......

avangalukku pudikalana a.r.rahaman i kurai solvatha, vinnai thandi varuvaya la ell songs um hit, avanga love a anubavichiruntha theriu....

charu akka, neenga yen rahan kitta irunthu orey standard expect panringa, neenga mothalla maarunga.