Thursday, May 20, 2010

மழை

கோடையில் திடீர் மழை. மழைக்கு இதமாய் கவிதை(கள்).....


                                                
            
                                          அவன் எப்போதும்
                                          இங்கே தான் இருப்பான்.
                                          எத்தனையோ ஆண்டுகளாய்
                                          கடந்து போகிறேன் அவனை.
                                          கண்கள் சந்திக்கும்போது
                                          அரைப் புன்னகையைப்
                                          பகிர்ந்து கொண்டிருக்கிறோம்
                                          அவன் இல்லாது போன
                                          தினத்திலிருந்து எல்லோரையும்
                                          கேட்கிறேன், அவன் யாரென்று.

                                                                                       -கனிமொழி

5 comments:

Thangavel K said...

கவிதை(கள்)..... Super..

Surendhar said...

thanks

Anonymous said...

கனிமொழி கவிதைகள் எல்லாம் படிப்பீர்களா ? மழைக்கு இதமாகத்தான் இருக்கிறது ...

Ilangkumaran said...

ஆங்கிலத்தில் "EGO" என்று சொல்லக்கூடிய குணமுள்ள நம் வட்டாரப் பெண்களுக்கு,
இந்தக் கவிதை ஒரு பாடம்.

Surendhar said...

அதை ஈகோவா பார்க்கவில்லை. இயல்பான ஒரு தயக்கமோ, அல்லது மனத் தடையாக ஏன் இருக்க கூடாது. தினப்படி வேலைகளில் தவறவிட்ட நபர்கள் மட்டுமல்ல. சந்தர்பங்களும் நமக்கு இருக்கின்றது தானே. அந்த மெல்லிய உணர்வை சொன்னதாலையே நான் பதிய வேண்டி இருந்தது. நீங்கள் சொல்லும் மாற்று கருத்தையும் மறுப்பதற்கில்லை.