தமிழ் மொழியையும், நம்மையும் பெருமையுறச் செய்த தமிழறிஞர்கள் பலர். இவர்களைப் பற்றி பிறகு.
******
செம்மொழி என்ற வார்த்தை திடிரென்று நம் எல்லோருக்கும் பரிச்சயம் ஆகியிருக்கிறது. கோவை செம்மொழி மாநாட்டு செய்திகள் நம்மை வந்து சேருவதற்கு எல்லா வழிகளிலும் அரசாங்கம் முயன்று, வெற்றியும் பெற்றிருக்கிறது. இதில் அரசியல் பார்க்கத் தேவையில்லை. மொழி வளர்ச்சிகான வாய்பாக இதைப் பார்க்கலாம்.
தமிழ் இணைய தொழில்நுட்ப வல்லுநர்களும் ஆய்வறிஞர்களும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகள் வழங்க உள்ளனர்.
தமிழ் இணைய தொழில்நுட்ப வல்லுநர்களும் ஆய்வறிஞர்களும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகள் வழங்க உள்ளனர்.
கணினியில் தமிழும் பிற திராவிட மொழிகளும், கணினிக் கலைச் சொல்லாக்கத்தில்(Technical terms) புதுச் சொல் உருவாக்கம், தமிழ் நாட்டில் தமிழ்க் கல்வி நடைமுறைச் சவால்கள், கணினி மயமாக்கலுக்கான தேவைகளும் தரப்படுத்தலின் முக்கியமும்(Needs & standards), கணினி வழி தமிழ் எழுத்து உணரி செயற்பாடுகள்(language recognization) அதில் உள்ள சிக்கல்கள், இரு வழி மொழி பெயர்ப்பு, கணினி வழி கல்வி, தமிழில் தேடு பொறிகள்(search engines), கையடக்கக் கருவிகளில் தமிழ், தமிழில் சிந்தனைத்திறன் கணினி ப்ரோக்ராம், கணினியில் தமிழ்ப் பேச்சு மற்றும் சொற்பகுப்பு ஆய்வு, தமிழ் ஒருங்குறி (unicode) - இன்னும் இன்னும் நாம் செய்ய வேண்டியது பாக்கி இருக்கிறது.
இதை விவாதிக்க வேண்டாமா? நாம் எங்கே தடுமாறுகிறோம், தவறுகிறோம் என்று பார்க்க வேண்டாமா? பிழை திருத்த வேண்டாமா? இதுவரை கண்டு பிடித்ததை சொல்ல வேண்டாமா? உண்ணத படுத்த வேண்டாமா? அதற்கு ஒரு தளம் வேண்டும், வாய்ப்பு வேண்டும், முயற்சி வேண்டும், ஆரோக்கியமான சூழல் வேண்டும், தொழில்நுட்பம் வேண்டும், இப்படி நிறைய வேண்டும். இதில் அரசியல் பார்த்து கோட்டை விட்டுவிடக் கூடாது.
******
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு ஜூன் 23 முதல் 25 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு. இதில் பலன் இல்லாதவர்கள் நம்முடன் சேர்ந்து பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம். (மாநாட்டு விவரங்களுக்கு http://www.ulakathamizhchemmozhi.org/)
நம் கணினி வாழ் நவீன தமிழ் குடிகளுக்கு, அவர்களை அறிமுகம் செய்வதாய் உத்தேசம். என்னது அறிஞர்களையா? என்று பதறுபவர்களாய் நாம் இருக்கிறோம். இந்த 'டாப்பிக்' உங்களுக்கு 'போர்' அடிக்கும் என்று நீங்கள் ஒதுங்கும் அபாயம் இருக்கிறது. அதை உணர்ந்தே இருப்பதால், என் தீர்மானங்களை இப்படியாக வைத்துக்கொண்டேன். சுருக்கமாகச் சொல்வது என்று. ஒரு நிமிடத்திற்குள் உங்களுக்கான 'ஈகிள் வீவ்' கிடைக்கச்செய்வது. கிடைத்துவிடும்! வள்ளுவர், ஔவை, கம்பர், பாரதி, பாரதிதாசன் பற்றி ஓரளவு பரிச்சயம் நமக்கு இருப்பதால் அவர்களை தொடப்போவது இல்லை.
ஆய்வும் தொகுப்புமே மூச்சாய் இருந்தவர்கள் இந்த அறிஞர்கள். சில உத்திகளை பயன்படுத்தியே இவர்களைப் பற்றி சொல்லப் போகிறேன். பாதி வழியில் நீங்கள் அதைக் கண்டுகொண்டால் என் நல்ல நோக்கம் கருதி மன்னிப்பீர்கள். நம்புவோமாக!
முதல் யுக்தி, என் லிஸ்டில் இருப்பவர்களை உங்களுக்கு அவ்வப்போது அறிமுகப்படுத்துவது. ஒரேயடியாக சொல்லப் போவது இல்லை. சந்தோஷம் தானே.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், படிக்க ஒரு நிமிடம் செலவழித்தல். தெரிந்து கொள்ள, முழுதாக ஒரே ஒரு நிமிடம்.
******
ஒரு சின்ன சந்தேகம்?
ம்…. கேளுங்கள்.
அந்த லிஸ்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
எத்தனை பேர் பற்றிய விஷயங்கள் என்று கேளுங்கள்.
சரி எத்தனை விஷயங்கள் ?
உங்களுக்கு Duodecad என்றால் தெரியுமா?
அப்படீனா?
அதுதான் உங்கள் சந்தேகத்திற்கான பதில்!
2 comments:
'தமிழ் எழுதி' கொடுத்த உங்களுக்கு நன்றி!!! தமிழறிஞர்கள் பற்றிய உங்கள் பதிவுகளை வரவேற்கிறோம்!!!
உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு மிகவும் நன்றி
Post a Comment