Wednesday, October 27, 2010

தீண்டும் இன்பம்

எந்திரன் - நமது பார்வை

எந்திரன் - திரையிலோ, திருட்டு ஸிடியிலோ இணையத்திலோ பார்த்துவிட்ட பிறகு, அவரவருக்கு கருத்தும் அபிப்பிராயமும் ஏற்பட்டுவிட்டது. முதல் நாள் விடியற்காலை 4 மணிக்கு படம் பார்த்த ஆரம்ப சந்தோஷம் அலாதியானது. ஆரவாரம் அடங்கி, அவரவர் வேலைப் பார்க்க தொடங்கிவிட்டிருக்கிறோம். இப்பொழுது சற்றே உணர்ச்சிவசப்படாமல், நுரை விளக்கிப் பார்ப்போம்.


எந்திரனுக்கு அதை உருவாக்கியவரின் காதலி மேல் காதல். இந்த கதையின் திரைக்கதையில், சில சுவாரஸ்யங்கள் தள்ளி நிறைய கோட்டைவிட்டிருக்கிறார்கள். ஒவ்வொன்றாக,

1. Prime numberன் அத்தனை சொல்லும் ரோபோவுக்கும் பெண்ணின் காதல் பெரிசு.

2. சுயசிந்தனை பெற்றவுடன் கவிதை படிக்க ஆரம்பித்து விடுகிறது, கட்டளையை மீறி.

3. ஒரு ரெட் சிப்பில் அத்தனை அடம் வந்துவிடுகிறது, ரெட் சிப்- உவமை. மக்களுக்கு புரியாமல் போய்விடக்கூடாது என்ற கவலை இயக்குனருக்கு.

4. ரோபோவினால் எல்லாம் முடியும் என்பதை வசனத்திலும் காட்சிகளிலும் திரும்ப, திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பது. பாடல்களிலும் அதே.

5. எந்த வேலை செஞ்சாலும் - ஆராய்ச்சி செய்வது வரை - அழகான காதலி இருந்தே தீருவாள். இந்த க்ளிஷேவை எப்போது மீறுவோம்?

6. பாடல் காட்சிக்காக (கிளிமாஞ்சாரோ ரஜினியை கோழையாக காண்பிக்க வேண்டுமா என்ன? காமெடி முயற்சி பண்ணியிருந்தாலும் 'சாரி'.

7. ரெண்டு, ஒரு ரஜினி ஓகே. திகட்ட திகட்ட எதற்கு அத்தனை ரஜினி.

8. Climax Graphics காட்சிகளை எவ்வளவு தூரம் justify பண்ண முடியும் - இயக்குனரால்? கதைக்காக.

9. செக்ஸை தாண்டி யோசிக்கும் ரோபாவால், சிக்கலான கேள்விக்கு - 'hypothesis' சொல்லும் ரோபோவால், நுட்பமாக பிரசவிக்கும் ரோபோவால், 'ஐஸ்'ஸின் மனதை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆச்சர்யம். ஒரு வேளை கதையின் ட்விஸ்ட் அதுதானோ!

10. ஏன் கடைசிவரை ஒரு 'பெண் ரோபோ' செய்யும் யோசனை, ரஜினிக்கு தோன்றவில்லை.

இருந்தும்.....இவ்வளவு இருந்தும்...


பணம் வைத்திருக்கிறார் - தயாரிப்பாளர்.

வித்தை கற்றவர் - இயக்குனர்.

அழகும், திறமையும், நடிக்கவும் - நாயகி.

பாடலாகட்டும், காட்சியாகட்டும், கிராஃபிக்ஸ் ஆகட்டும் - கூட்டணி, கூட்டணி உழைப்பும் அபாரம்.

அத்தனைக்கும் மேல் ரஜினி - மாஸ் பலம், ஓடும் குதிரை, ஜெயித்திருக்கிறது. 'வெற்றி' எல்லாவற்றையும்விட ஓங்கி உரைக்கும்.
*****
சமிபத்தில், சுஜாதா எழுதிய நாவலான 'தீண்டும் இன்பம்' படிக்க சந்தர்பம் வாய்த்தது (கிழக்கு பதிப்பகம்). கிட்டதட்ட பத்தாண்டுகளுக்கு முன் 'விகடனில்' தொடராக வந்திருக்கிறது. உங்களில் சிலர் படித்திருக்கலாம். நான் இப்போதுதான்.

நாவலின் ஒன் லைன் - கல்லூரிக்குப் போகும் பெண் கர்ப்பமானால் என்ன ஆகும்? இந்த ஒற்றைவரியை வைத்துக்கொண்டு, ஒரு பெண்ணின் மனப் போராட்டங்களை, இயல்பு மாறாமல், வெகு யதார்த்தமாக, ரசிக்கும்படி தந்திருக்கிறார். இதில் குறிப்பிடும்படியாக நான் கருதுவது, இன்றும் பல விஷயங்களில் முரண்படாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும்படி இருப்பதுவே. பொழுதுபோகும்படியாகவே இருந்தாலும் இளைஞர்களுக்கான 'மணி' கட்டப்பட்டு இருக்கிறது. வாத்தியாராச்சே !

ரசித்த இடம் -

"தேசியக் கருத்தரங்கம். அதற்கு பரீட்சைக்குப் படிப்பது போல இரண்டு பேரும் லைப்ரரி ஹாலில் படித்தார்கள். 'Unplanned Pregnancy' என்ற புத்தக்கதை பிரிட்டிஷ் கவுன்சிலிலிருந்து ப்ரமோத் எடுத்து வந்திருந்தான். சன்னமான குரலில் படித்துக்காட்டினான்.

'ஒரு பெண்ணுக்கு வேண்டாத கர்ப்பம் என்பது மிகக் கடினமான, கடுமையான ஒரு அனுபவம் ...............................................................................................................................................
அமெரிக்காவில் மாத்திரை சாப்பிடுபவர்களில் 16 சதவிகிதமும், உறைகளைப் பயன்படுத்துபவர்களில் 16 சதவிகிதமும் வேண்டாத கர்ப்பம் அடைகிறார்கள்.'

ப்ரமோத் அதைப் படித்துவிட்டு நிமிர்ந்தான். 'இதெல்லாமா சொல்லப்போறோம் ப்ரமோத்' என்றாள்.

'ரிஸ்க் இருக்கிறது தெரியாம மாணவ-மாணவிகள் அது பத்திரமானதுன்னு நெனைச்சுக்கிட்டு மாட்டிக்கறாங்கன்னு சொல்லலாம். செக்ஸ் எஜுகேஷ்னுக்கு வலுவான சாட்சியமாப் பயன்படுத்தலாம் இல்லையா? என்ன?'

'நீங்க என்ன யூஸ் பண்றீங்கன்னு கலாட்டா பண்ணுவாங்களே ப்ரமோத்? பயமா இருக்கு.'

'கேட்டா, சிரிச்சிட்டு ஐஸ்வாட்டர்னு சொல்லு.'

'புரியலை.'

புரிஞ்சவங்க நம்ம கட்சி. புரியாதவர்களுக்கு ஒரு க்ளு- வயது வந்தவர்களுக்கான சைவ ஜோக் இது. அடம்பிடிப்பவர்களுக்கு - ஒரு நடை நாவலை படிச்சுட்டு வாங்க, அப்புறமா சொல்லுறேன்.

*****
ரசித்த கவிதை

4 comments:

Anonymous said...

நல்ல பதிவு.

// 10. ஏன் கடைசிவரை ஒரு 'பெண் ரோபோ' செய்யும் யோசனை, ரஜினிக்கு தோன்றவில்லை. //

சிரிப்பை அடக்க முடியவில்லை. "என் இனிய இயந்த்ரா" படித்திருப்பீர்களே ஆனால் சுஜாதா பெண் ரோபோ பற்றி சொல்லியிருப்பதை அறிந்திருப்பிர்கள். நாவலில் இயந்திர நாய், திரைப்படத்தில் ரஜினி, அவ்வளவே!

// 8. Climax Graphics காட்சிகளை எவ்வளவு தூரம் justify பண்ண முடியும் - இயக்குனரால்? கதைக்காக //

கதையை எப்படி முடிப்பது என்று ஒரு தெளிவு இல்லை. ஒரு வேளை சுஜாதா அதற்குள் இறந்து போனாரோ என்னவோ.

தீண்டும் இன்பம் - படிக்க வேண்டும். படித்துவிட்டு வருகிறேன்.

~Guru.

Unknown said...

3 thani thani pathiva irundhu irundha padika innum suvarsiyama irundhu iruku...... padichathum manasula pathinju irukum.......

orae ithula konjam jasthiya solliteengalo nu oru feel.

Enthiran vimarsanam fine...... Theendum inbam enakum padikanum nu thonuthu...... parpom book kedaikutha nu........

Ofcourse the last one nalla kavithai....... overall oru nalla pathivu

chakrapani iyappan said...

I read ur blog abt endhiran.I differ on some points & i ve answers to the queries u ve made in it.Net, i like it for the way it has been narrated&for the efforts you ve put behind it.GOOD.

Thangavel K said...

எந்த வேலை செஞ்சாலும் - ஆராய்ச்சி செய்வது வரை - அழகான காதலி இருந்தே தீருவாள். I am also planning to do some research.. :-) Enakkum Azhgana kathali kidapipala..

Theendum inbam.. is very nice story.. Aaanal ungal comments partha piraku.. meendum oru murai padikka thodrukirathu.. :-)